News

பிரித்தானிய நகரமொன்றில் பல காயங்களுடன் சடலங்களாக..ஒரே வீட்டில் இறந்துகிடந்த ஆண், பெண்

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள வீடு ஒன்றில், ஆண்-பெண் உடலில் பல காயங்களுடன் சடலங்களாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு யார்க்ஷைர் நகரின் Huddersfieldயில் உள்ள முகவரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர் என்பதை மருத்துவர்கள் உதவியுடன் உறுதி செய்த பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய துப்பறியும் கண்காணிப்பாளர் மார்க் போவ்ஸ், ‘இது தெளிவாக, ஒரு விதிவிலக்கான மற்றும் கடுமையான குற்றமாகும். இவர்கள் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடந்து வருவதாக குடியிருப்பாளர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நாங்கள் சம்பவ இடத்திலும், டால்டன் பகுதியில் உள்ள மற்ற இடங்களிலும் விரிவான விசாரணையை நடத்தி வருகிறோம். என்ன நடந்தது என்பதற்கான சூழ்நிலைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், Harpe Ingeயில் உள்ள இடத்தில் இரவு அல்லது இன்று காலை சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்ட எவரும் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த குற்றத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என உறுதியளிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்குழுவை 101 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், பொலிஸ் பதிவு 408யில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top