News

பெரும் எண்ணிக்கையிலானோரை நாடுகடத்த இருக்கும் ஜேர்மனி: புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம்

புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை நடைபெற இருக்கும் அகதிகள் உச்சி மாநாடு ஒன்றில், இது தொடர்பாக பெடரல் மற்றும் மாகாண அரசுகள் விவாதிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை விரைவாகவும், அதிக எண்ணிக்கையிலும் நாடுகடத்த ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனிக்குள் நுழைய தடை விதிகப்பட்டுள்ளவர்கள், தடையை மீறி ஜேர்மனிக்கு வந்திருக்கும் நிலையில், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம்.

அத்துடன், அவர்களை நேரடியாக நாடுகடத்த வசதியாக ‘central arrival facilities’ என்னும் அமைப்புகளும் உருவாக்கப்பட உள்ளனவாம்.

கடந்த ஆண்டில் மட்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜேர்மனிக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புலம்பெயர்தலைப் பொருத்தவரையில், முனிசிபாலிட்டிகளும், மாகாணங்களும் தங்கள் இலக்கை எட்டிவிட்டதாக தெரிவித்துள்ள பவேரியாவின் Minister President என்னும் பதவியில் இருக்கும் Markus Soeder, கூடுதல் நிதியுதவியும், புலம்பெயர்தலுக்கு மேம்பட்ட மேலாண்மையும் தேவை என்றும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top