இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழர் நினைத்துப்பார்க்க முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்துவருகின்றனர் என கனடாவின் கன்சவேடிவ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (18.05.2023) வெளியிட்ட காணொளிப் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளர். மேலும் அவர் தெரிவிக்கையில்
முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் இழந்த அனைத்து உயிர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் மரியாதையையும் செலுத்த நாங்கள் கடமைப்பட்டவர்களாயிருக்கின்றோம்.
இலங்கையில் இராணுவ மயமாக்கலுக்கும் தமிழ் மக்கள் மீது கையாளப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.
யுத்த காலத்தில் மகிந்த ராஜபக்ச செய்த குற்ற செயல்களுக்கு கட்டாயம் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.