சிவில் சமூக அமைப்புக்கள் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலி முகத்திடலில் அனுஷ்டித்தார்கள். இந்த முறை பொரளை பொது மாயனத்தில் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறுகையில்,“1983 ஆம் ஆண்டு பொரளை மாயனத்திலே இன படுகொலை ஆரம்பிக்கப்பட்டது. உயிரிழந்த இராணுவத்தினரை பொரளை மாயனத்திற்கு புதைக்க கொண்டு வந்து, அந்த இடத்தில கூடிய இனவெறியர்கள், காடையர்கள்,குண்டர்கள் தமிழர்களை அழிக்க ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்து தான் தமிழர்களின் கடைகள் அழிக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
இதை தெற்கு மக்களுக்கு சொல்லவே நாங்கள் பொரளை மயானத்தில் நினைவேந்தலை அனுஷ்டிக்க நினைத்தோம்.
நாடு இன்றும் இனப்படுகொலை சூத்திரதாரிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அது ஜனாதிபதியாக இருக்கலாம். மகிந்த ராஜபக்ச குழுவினராக இருக்கலாம். அவர்கள் தற்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.