குறித்து பதிவிட்ட கனேடிய பிரதமர் ட்ரூடோ பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே மடாலயத்தில் பிரித்தானியாவின் 40வது மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்டார். இந்த விழாவில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோஃபி கிரெகோயர் உடன் கலந்துகொண்டார்.
முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில், சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அவரது மாட்சிமையின் நீண்டகால அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக, கனடாவின் NCCவிற்கு(Nature Conservancy of Canada) 1,00,000 டொலர்கள் கனடா அரசு நன்கொடை அளிப்பதாக பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
மேலும், முடிசூட்டு விழா குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று, நாங்கள் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடி, காமன்வெல்த் மீதான கனடாவின் நீடித்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.
புதிய அரச மகுடம், அரசுக் கொடி, கனேடிய முத்திரை, சேகரித்த நாணயங்கள் ஆகியவற்றுடன் – இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாங்கள் எவ்வாறு குறிக்கிறோம் என்பதைக் கண்டறியவும்’ என அறிக்கை ஒன்றை இணைத்துள்ளார்.

 
											 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													