News

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த சூறாவளி- 4 பேர் பலி, மற்றும் 10 பேர் படுகாயம்.

டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அண்டை நகரமான லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், “மட்டாடர் நகரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சூறாவளியை கொண்டு வந்துள்ளது. இதில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

வடக்கு டெக்சாஸில் உள்ள மோட்லி கவுண்டியின் முக்கிய நகரமாக கருதப்படும் மட்டாடர் நகரில் 600 மக்கள் தொகை கொண்டுள்ளது. மட்டாடர் மேற்கு பகுதியில் சூறாவளியால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top