ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது.
அந்த கோரவிபத்தில் 288 பேர் பலியாகியதுடன் 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்.
சென்னை நோக்கிச் சென்ற ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் ரயில் தடம் புரண்டதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது.
பெங்களூரு ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து சமீப காலத்தில் நடந்த மிக மோசமான விபத்து என்று கூறப்படுகின்றது.
மேலும் இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தற்போதைய விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
மேலும் இதனால் பலரும் பாதிக்கப்பட்டு தனது குடும்ப உறுப்பினர்களை தேடி வருகின்றார்கள்.