இலங்கை பெண்ணான துஷாரா வில்லியம்ஸ், கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் வில்லியம்ஸ் என தெரிய வருகின்றது.
கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியை கொழும்பு பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.
இதன் பின்னர் 1991இல் கனடாவுக்கு அவர் குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துஷாரா வில்லியம்ஸ் இலங்கையில் உள்ள கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.