Canada

கனடாவில் 100 இற்கும் மேற்பட்ட இடங்களில் பற்றியெரியும் காட்டுத்தீ; அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை

கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

ஏற்கனவே 3.8 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு காட்டுத் தீ பரவல் 15 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

காட்டுத் தீயால் கனடாவின் பல்வேறு நகரங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

அதேசமயம் அண்டை நாடான அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top