News

சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணத்துக்கு எதிர்ப்பு – ஈழத் தமிழர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்

 

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்காவின் பிரான்ஸ் பயணத்துக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் ஈழத் தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் பிரான்ஸில் உள்ள சிறிலங்கா தூதரக முன்றலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை தீயிடப்பட்ட தேசியக் கொடி
சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணத்துக்கு எதிர்ப்பு – ஈழத் தமிழர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம் | Protest Sri Lanka President S Visit To France

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் சிறிலங்கா தூதரகத்துக்கு எதிராக இடம்பெற்றுள்ளது.

இன்றையபோராட்டத்தின் போது தமது தூதரகத்தில் இருக்கும் கொடி போராட்டக்காரர்களால் அகற்றப்படலாம் என்ற அச்சம் காரணமாக தூதரக நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக தூதரக முன்றலில் இருந்த தேசியக் கொடியை அகற்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த முறை தூதரக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிறிலங்காவின் தேசியக்கொடி போராட்டக்காரர்களால் அகற்றப்பட்டு தீயிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top