அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
குறித்த விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையிலே நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த ஐவரது உடல்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.