News

தங்கச் சுரங்கம் இடிந்து 31 பேர் பரிதாப பலி! 16 பேர் கைது

தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது நடந்த வெடி விபத்தில் 31 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 18ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவின் பிரீஸ்டேட் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் வேலைபார்த்த 31 பேர் பலியானதாக தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் பலர் இதில் காயமடைந்துள்ளனர்.

தங்கச் சுரங்கத்தில் கனிம வளங்கள் தீர்ந்துவிட்டதால் கடந்த 1990களில் அதில் செயல்பாடு நிறுத்தப்பட்டதாகவும், எனினும் அவ்வப்போது சட்டவிரோதமாகவும் கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுரங்கப்பணியின் போது நடந்த எதிர்பாராத வெடிவிபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இச்சம்பவம் தொடர்பாக 16 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அரசு அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் சுரங்கங்களை மூடி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top