News

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி,மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

 பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கொஷிஸ்டன் மாகாணத்தின் ஹொலை பலஸ் நகரில் இருந்து பிஷம் நகர் நோக்கி இன்று வேன் சென்றுகொண்டிருந்தது. வேனில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top