News

பிரித்தானியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள்

பிரித்தானியாவில்,சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இரகசிய பொலிஸ் நிலையங்கள் இருப்பதை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin) புதன்கிழமை ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது,”இரகசிய பொலிஸ் நிலையங்கள் என்று எதுவும் இல்லை. உண்மைகளை மதிக்கவும், மிகைப்படுத்தல்கள் மற்றும் சீனாவை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவும்.

மேலும் சீன-பிரித்தானியா உறவுகளுக்கு தடைகளை உருவாக்குவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும்.

சீனா எப்போதும் சர்வதேச சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்கிறது மற்றும் அனைத்து நாடுகளின் நீதித்துறை இறையாண்மையையும் மதித்து வருகிறது.”என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் இயங்கும் சீன இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுவதற்கு லண்டன் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு அப்படி எந்த இரகசிய அலுவகங்களும் இல்லை என சீனா கடுமையாக மறுத்துள்ளது.

பிரித்தானியாவில் மனித உரிமைகள் குழுவான Safeguard Defenders அறிக்கை வெளியிட்டதையடுத்து, இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் சீனத் தூதரகத்திற்கு உத்தரவிட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்டாட் (Tom Tugendhat) தெரிவித்தார்.

Safeguard Defenders அறிக்கையின்படி, இந்த நிலையங்கள் நிர்வாக சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டன, ஆனால் அவை குடியேறிய சமூகங்களைக் கண்காணிக்கவும் துன்புறுத்தவும் பயன்படுத்தப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில், மக்களை சீனாவுக்குத் திரும்பும்படி வற்புறுத்தவும் பயன்படுத்தப்பட்டதாகவும் டாம் துகென்டாட் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top