News

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் பெண் கைதிகளால் வெடித்த மோதல்; 41 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் (Honduras) ,தாமரா (Tamara)பகுதியில் உள்ள   சிறைச்சாலையில் நேற்றைய தினம்  இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது.

இதில்   41 பெண் கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும்  100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை   அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும்  அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top