News

வங்காளதேசத்தில் பஸ்சில் சிலிண்டர் வெடித்து 7 பயணிகள் உடல் கருகி சாவு

வங்காளதேசத்தில் பஸ்சில் சிலிண்டர் வெடித்து 7 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தின் மத்திய பரித்பூர் பகுதியில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி கியாசில் இயங்கும் மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அந்த பஸ்சின் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top