News

இலங்கை தொடர்பான சந்திரிகாவின் கருத்தை வரவேற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை ஒரு தோற்றுப்போன அரசு என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புக்கொண்டிருப்பது முன்னெப்போதும் காணாத ஒப்புதலாகும் இந்த ஒப்புதலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,இந்த உண்மையை வெளிப்படையாக சொன்னதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதியை பராட்டிய போதிலும், இந்த தோல்விக்கு ஊழலைக் காரணமாக காட்டியிருப்பதை மறுத்துரைக்கிறது.

தமிழர்களுக்கு எதிராக அரசின் நிறுவனமயமாக்கப்பட்ட இன பாகுபாடு பரவலாகவும் மற்றும் ஆழமாகவும் வேரூன்றி இருப்பதும், தமிழினவழிப்பும், தமிழர்களுக்கு எதிரான அரசின் கொடுங்குற்றங்களும் இலங்கை அரசின் தோல்விக்கு அரைகுறைக் குற்ற ஒப்புதலே காரணம் என்பதைக் குறிப்பிடத்தவறியிருப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 2023 ஏப்ரல் 16ஆம் திகதி யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவர் மதன்ஜீத் சிங் நினைவுச் சொற்பொழிவு ஆற்றுகையில் சொன்னார் “காலனியாதிக்க ஆட்சியாளர்களின் 450 ஆண்டுக் கால அழிவு வேலைக்கு பிறகும் இலங்கை சில மிகச்சிறந்த சமூகப் பொருளியல் வளர்ச்சிக் குறியீடுகள் கொண்டதாக இருந்தது. இன்று 75 வயதில் இலங்கை அரசு தோற்றுப்போய் நிற்கிறது.”

குமாரதுங்க அம்மையார் தமது உரையில் முன்னாள் சிங்கப்பூர் ஜனாதிபதி லீ குவான் யூ 1956ஆம் ஆண்டுஇலங்கைக்கு வந்து சென்ற பிறகு கூறியதை மேற்கோளாகக் காட்டியது பொருத்தமானதே.

அந்த நேரத்தில் பொதுநலவாய நாடாகிய இலங்கை புதிதாக அமைந்த சிங்கப்பூர் பின்பற்ற விரும்பிய முன்மாதிரி நாடாக விளங்கிற்று என்று லீ குவான் யூ கூறியிருந்தார்.‘’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top