News

லண்டன் விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்: அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்

லண்டன் – கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றில் இளைஞரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சசெக்ஸ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர்புடைய நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், உயிரிழந்த நபரை அடையாளம் காணவும் அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், காம்பியா தூதரக அதிகாரிகளுடனும் இந்த விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 20ல் இருந்து 30 வயதிருக்கலாம் எனவும், காம்பியா அதிகாரிகளுடன் தரவுகளை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இளைஞரை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top