ஈழத்தமிழர்களின் கைகளில் நிரந்தர அரசியல் தீர்வு – தலைவிதியை தீர்மானிப்பார்களா..!
“ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை மக்களே தீர்மானிக்க வேண்டும் – எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்க வேண்டும்”
இவ்வாறு சிவகுரு அதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின் இணைத்தலைவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கருத்துரைத்த அவர், இதனை தனது தனிப்பட்ட கருத்தாக வெளிப்படுத்தியுள்ளார்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அனைவரும் ஒருங்கிணைந்திருக்கிறோம்.
அந்த ஒற்றுமையோடு, எங்களுடைய நிரந்தர அரசியல் தீர்வை நாங்கள் தீர்மானிக்கக்கூடிய நிலையை நோக்கி நாங்கள் நகர வேண்டியிருக்கிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.