உக்ரைனில் போர் கைதிகளாக சிக்கிய வீரர்களை வாக்னர் கூலிப்படை சித்திரவதை செய்தமை தொடர்பில் தற்போது தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் போர் கைதிகளாக சிக்கிய வீரர்களை வாக்னர் கூலிப்படை சித்திரவதை செய்து தெருவோர மரங்களில் கொன்று தொங்கவிட்டதாக அதனை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
உக்ரைன் படையில் தன்னார்வலர் மருத்துவ ஊழியராக செயல்பட்டவர் கனேடியரான Brandon Mitchell என்பவரே வாக்னர் கூலிப்படையின் கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், சுகாதாரத்துறையில் அனுபவம் இல்லாத தாம், உக்ரைன் இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் நிலைக்கு முன்னேறியதை தம்மால் நம்ப முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் நிலையில், சிறைபிடிக்கப்பட்ட சில ரஷ்ய வீரர்களுக்கும் தாம் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பிராண்டன் மிட்செல் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்னர் கூலிப்படையினர் தீவிரமாக போரிட்ட பக்மூத் பகுதியில், உக்ரேனிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டு தெருவோர மரங்களில் தொங்கவிடப்பட்டிருந்ததை தாம் நேரில் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.