தெற்கு கலிபோர்னியா விமான நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பனிமூட்டம் காரணமாக இரண்டு முறை தரையிறங்கும் முயற்சிகளில் இரண்டாவது முயற்சியின் போது சிறிய விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிர்வாகத்தின் அறிக்கையின்படி நேற்று அதிகாலை 4.15 மணியளவில் சான் டியாகோவிற்கு வடக்கே 65 மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானமானது லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:15 மணியளவில் புறப்பட்டதாகவும் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தானது ஒரு வயலில் விழுந்துள்ளதால், சுமார் ஒரு ஏக்கர் தாவரங்கள் தீயால் கருகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.