News

துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேர் கைது

துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

துருக்கிக்கு அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுப்பது சிக்கலான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 ஆயிரத்து 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சட்ட விரோதமாக குடியேற்றத்தை தடுக்க அங்குள்ள கடற்கரையில் சுற்றுலா படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் இஸ்தான்புல் நகரில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு புலம்பெயர்ந்தோரின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 39 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top