News

படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு ஒன்று பயணம் மேற்கொண்டது. இந்த படகில் சுமார் 70 பயணிகள் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர்.

இதனால், படகின் எடை ஒரு பக்கத்தில் அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை  அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top