பிரான்சில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸின் பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.
இந்நிலையில், வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட 667 பேர் வரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் உயரடுக்கு வீரர்கள் மற்றும் GIGN குழுக்களை சேர்ந்த 40,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தலைநகர் பாரிஸில் 9000 பேருக்கு எதிராக 5000 பொலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரான்ஸ் பொலிஸார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், 3 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவரை கலவரக்காரர் ஒருவர் துரத்தி துரத்தி வானவேடிக்கை பட்டாசுகளால்தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த 2 இரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவரை கலவரக்காரர்கள் தாக்கி சுயநினைவை இழக்க செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் சாலைகளில் சில கலவரக்காரர்கள் கையில் துப்பாக்கிகளுடன் அலையும் காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கலவரத்துக்கு மத்தியில் கலவரக்காரர்கள் கூட்டம் ஒன்று துப்பாக்கி விற்பனை நிலையத்தை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், சாலைகளில் சில கலவரக்காரர்கள் கையில் துப்பாக்கிகளுடன் அலையும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன்,சில கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.அவற்றில் 4 தமிழ் கடைகளும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.