உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) கையளிக்குமாறு தமது நிர்வாகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அமெரிக்க தற்காப்பு அமைச்சு ஏற்க மறுத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் , உக்ரைன் பிள்ளைகளைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் ரஷ்யாவின் போர்க்குற்ற ஆதாரங்களை ICC இடம் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜோ பைடனின் உத்தரவிற்கமைய, போர்க்குற்றங்களின் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது அரசியல் ரீதியான வழக்குத் தொடுக்க அது வழியமைத்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்யும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் ஆணை பிறப்பித்துள்ளது.