ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷிய ராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில், ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷிய ராணுவ கிடங்கை, தகர்த்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறுகையில், பாதுகாப்பு படையினரின் துல்லியமான தாக்குதலால் மகிவ்கா பகுதியில், ரஷிய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.