News

மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு, 20 பேர் படு காயம்.

மெக்சிகோவில் இந்தியர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

 மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். பயணிகள் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பஸ் மாநில தலைநகரான டெபிக்கிற்கு வெளியே நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்சில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top