அமெரிக்கா விதிக்கும் வரிகளை சமாளிக்க கனடா புதிய சட்டம்! மார்க் கார்னி அதிரடி

அதன்படி, கனடா உள்நாட்டில் முழுமையான வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்த எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்குள் சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கனடாவில் 10 மாகாணங்கள், 3 பிரதேசங்களில் மாறுபட்ட வர்த்தக விதிகள் உள்ளன. இதனால் பணிகள் தாமதம் ஆகின்றன.
இந்தநிலையில், கார்னியின் திட்டம் மூன்று முக்கிய வழிகளில் செயல்படும்
.1.ஒன்றிய மாகாண விதிகளை ஒரே மாதிரியாக்குதல்
2.ஒரு மாகாணம் மற்றொரு மாகாண விதிகளை ஏற்கும் முறைமை
3.தேசிய அளவில் ஒரே விதிகளை உருவாக்குதல்
பிரதமரின் ஆய்வின்படி, உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதால் 15% வர்த்தக செலவுகள் குறைந்து, 4% முதல் 8% வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
கனடாவின் இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 2-ஆம் திகதி கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை சமாளிக்க பல உடனடி திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.