கடற்கரையில் காணப்பட்ட மர்ம உயிரினம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் கென்ட்டின் பகுதியில் உள்ள மார்கேட் கடற்கரையில், பவுலா ரீகன் என்ற பெண் தனது கணவர் தேவ் உடன் மார்ச் 10 ஆம் தேதி நடை பயிற்சி செய்துள்ளார்.
அப்பொழுது அந்த கடற்கரையில் இருந்த வினோத உருவம் ஒன்றை கண்ட அந்த தம்பதியினர், அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த உயிரினமானது, மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்டு, மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் வினோதமாக காட்சியளித்தது.
இது குறித்து கூறிய அவர், “என்னைப் பொறுத்தவரை, அது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் விசித்திரமாக இருந்தது. சிறிது நேரத்தில், ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது.
சிலர் அது படகில் இருந்து விழுந்திருக்கலாம் என்றும் கப்பலில் இருந்து ஒரு உருவமாக இருக்கலாம் என்றும் கூறினர். நாங்கள் படம் எடுக்கவில்லை என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார்.
வினோதமான உடலமைப்பு கொண்ட இந்த உயிரினம் குறித்து சமூகவலைத்தளத்தில் பலரும் விவாதித்து வருகிறார்கள். இது போன்று வினோதமான உயிரினங்கள் கடற்கரையில் கரை ஒதுங்கும் சம்பவங்கள் முன்னதாகவும் நிகழ்ந்துள்ளது.