இருளில் மூழ்கும் 20 லட்சம் காசா மக்கள்.. மின்சாரத்தை துண்டித்த இஸ்ரேல் – உதவிப் பொருட்களும் நிறுத்தம்

இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசா நகரம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த 13 மாத தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்தனர்.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் காசாவில் சிதிலமடைந்த தங்கள் இருப்பிடங்களுக்கு லட்சக்கணங்கனோர் திரும்பினர். இருப்பினும் அடிப்படை வசதிகள், சுகாதர மற்றும் மருத்துவ உதவிகளின்றி காசா மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த மாதங்களில் பிணை கைதிகள் பரிமாற்றம் நடக்கும் வரை அமைதி காத்த இஸ்ரேல், கடந்த வாரம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், காசாவுக்கான உணவு, தண்ணீர், மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்களை அடாவடியாக நிறுத்தியது.
இந்நிலையில் காசாவுக்காக மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் 20 லட்சதிற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம ஏற்பட்டிருக்கிறது
ஏற்கனேவே காசா நகர கட்டமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் மற்றும் சூரிய பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கிடைத்துவந்த சொற்ப மின்சாரமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மின்சார துண்டிப்பு மேலும் ஆழாமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.