News

இலங்கையை ஆக்கிரமித்த CIA உளவு அமைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

2,000 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில் கொழும்பில் ‘CIA’ தளமொன்று இயங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தின் படி, கொழும்பு மட்டுமில்லாது டெல்லி, கொல்கத்தா மற்றும் பாகிஸ்தானிலும் ஒரு ஒரு ‘CIA’ தளம் வீதம் இயங்கியதாக கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 100 வருடங்களாக அமெரிக்கா உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால், அதற்கு அந்நாட்டின் புலனாய்வுத் துறையும் ஒரு முக்கிய காரணமாகும்.

உலக ஒழுங்கின் முக்கிய புள்ளியாக இந்து சமுத்திரம் இருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளுக்குள் ஊடுருவுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top