News

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; புடின் 

 

 

 உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மிகவும் திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். இது ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கும், மக்களால் நம்பப்படும் ஒரு திறமையான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உதவும்.

தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புடினின் கருத்துகளுக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கியின் தலைமை தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறியதாவது: ரஷ்யா அமைதியை நோக்கிய நகர்வுகளைத் தடுக்க முயற்சி நடக்கிறது. போரை தொடர முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உக்ரைனில் ஆட்சி அரசியலமைப்பு மற்றும் மக்களால் தீர்மானிக்கப்படுகிறது என பதில் அளித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top