News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மீண்டும் எச்சரிக்கை விடும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று (15) நடைபெற்ற மக்கள் தொடர்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நீதி உறுதி செய்யப்படாவிட்டால், வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவது அவசியமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

நாட்டை ஆண்டவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்தனர், ஆனால் அவர்கள் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

அந்த அமைப்பை மாற்றுவதற்காகவே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். இருப்பினும், அமைப்பு மாறவில்லை என்றால், தாமும், தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அன்று கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இன்னும் கோருவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் அரசாங்கம் நியாயமான பதிலை வழங்கினால், பாதிக்கப்பட்டவர்கள் திருப்தி அடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அது நடக்கவில்லை என்றால், மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top