News

எரிபொருள், வேதிப்பொருள் ஏற்றிச்சென்ற இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து…..

எரிபொருள், வேதிப்பொருள் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.

கிரீஸ் நாட்டில் இருந்து போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்துக்கு சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. இரு கப்பல்களிலும் மொத்தம் 36 மாலுமிகள்   பயணித்தனர்.

இங்கிலாந்து தெற்கு கடற்பகுதியில் இன்று சரக்கு கப்பல்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒன்றோடு ஒன்று மோதின. இந்த சம்பவத்தில் இரு கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் கப்பல்களில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கப்பலில் சிக்கித்தவித்த 35 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரேஒரு மாலுமி மட்டும் மாயமான நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top