Canada

கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி

கனடாவின் 24வது பிரதமராகவும், லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் மார்க் கார்னி(Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதன் காரணமாக கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவுக்கு எதிராக ட்ரம்ப் வர்த்தக போர் அறிவித்துள்ள இந்த நேரத்தில் அதை சமாளிக்கும் வகையில் மார்க் கார்னி செயல்படுவார் என்று பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில் குறித்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

59 வயதாகும் மார்க் கார்னி கனடாவின் வடமேற்கு பகுதியில் பிறந்து ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் வளர்ந்தவர்.

கனடா மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய இவர், கடந்த சில மாதங்களாக ட்ரூடோவின் சிறப்பு பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

மார்க் கார்னி 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8ஆவது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.

2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தலைமைப் பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.

அவரை எதிர்த்து போட்டிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top