கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஹாமில்டன் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காலை 4:20 மணியளவில் ஹைவே 8 மற்றும் ப்ரூட்லேண்ட் வீதிகளுக்கு அருகாமையில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பல துப்பாக்கிச் சூட்டுகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் பல வாகனங்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தன.
அவற்றில் இரண்டு வாகனங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் ஆள் அடையாளம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை. காவல்துறை இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.