போதை மருந்து குற்றச்சாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா கூறியுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
போதை மருந்து, உளவு மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்குவோருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது குறித்த உரிய தகவல்களை அந்நாடு வெளியிடா விட்டாலும், உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. அதேநேரத்தில் இரட்டை குடியுரிமையையும் சீனா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டில், வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது அரிதான ஒன்றாகவே உள்ளது.
இந்நிலையில், போதை மருந்து பிரச்னையில் இந்த ஆண்டு கைதான கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார்.