News

காசாவில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் – 85 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படாத சூழலில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், காசாவில் கடந்த 18-ந்தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் சுமார் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஜாகர் அல்-வாகீதி கூறுகையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 592 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top