News

சூடான் வான்வழி தாக்குதலில் 54 பேர் பலி

 

சூடானின் டார்பரில் நடந்த வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஆப்ரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டு குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக உதவிக் குழுக்கள் இன்று தெரிவித்துள்ளன. பொதுமக்களை குறித்து வைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று சூடான் ராணுவம் மறுத்துள்ளது.

உள்ளூர் குழுவான பொது ஒருங்கிணைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ரெஜால் கூறியதாவது:

டோரா, எல்-பாஷர் நகரிலிருந்து வடக்கே 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். குறைந்தது 23 பேர் காயமடைந்தனர் மற்றும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த தாக்குதல் கிராமத்தின் வாராந்திர சந்தையின் பெரும் பகுதியை அழித்துவிட்டன. பல உடல்கள் கருகிவிட்டன. ஆர்.எஸ்.எப், எனப்படும் ஆயுதக்குழுக்கள், தினசரி தாக்குதல்களை நடத்திய போதிலும் சூடான் ராணுவத்தால் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

சூடான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நபில் அப்துல்லா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top