அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார். அவர்களை மொத்தமாக அழித்தொழிப்பேன் என ஏற்கனவே கூறியிருந்தேன் என்றும், தற்போது அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை புதிதாக ஏவுவதற்கு சென்றிருந்த புடின், ஒரு திறமையான அரசாங்கத்தைத் தெரிவு செய்ய, உக்ரைனை ஐ.நா. கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
மட்டுமின்றி, தனது பதவிக்காலம் முடிந்தும் ஆட்சியில் இருக்கும் ஜெலென்ஸ்கி, எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட சட்டப்பூர்வ தகுதியைக் கொண்டிருக்கவில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால் உக்ரைனின் அரசியலமைப்பு இராணுவச் சட்டத்தின் கீழ் இருக்கும்போது தேர்தல்களைத் தடை செய்கிறது. மட்டுமின்றி, ஜெலென்ஸ்கி தற்போதும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்து வருகிறார்.
போருக்கு பயந்து ஐந்து மில்லியன் உக்ரேனியர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது முறையான ஒரு தேர்தலும் சாத்தியமற்றது, மட்டுமின்றி, நான்கு வருடப் போரில் இன்னும் லட்சக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ர்ம்ப் முன்னெடுக்கும் அமைதி ஒப்பந்தங்களை தாமதப்படுத்தும் வகையில், முக்கியத்துவமற்ற காரணங்களை புடின் முன்வைப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், புடினின் கருத்துக்கள் ரஷ்யா அமைதியைப் பேச்சுவார்த்தை பற்றி தீவிரமாக இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனின் ஆட்சி அதன் அரசியலமைப்பு மற்றும் மக்களால் தீர்மானிக்கப்படும் என்றே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.