இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்று எலான் மஸ்க் காட்டமாக கூறி இருந்தார். இந்நிலையில், டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெஸ்லா கார்களை நாசவேலை செய்யும் போது பிடிபடும் நபர்கள் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். அதில் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்து நிதியளிப்பவர்களும் அடங்குவர், நாங்கள் உங்களை தேடுகிறோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். டெஸ்லா கார்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.