நாளையே நடக்கலாம்… அணு ஆயுத அபாயம் குறித்து எச்சரித்த ட்ரம்ப்

உலகில் ஏராளமானோர் பருவநிலை மாற்றம் குறித்த விடயங்கள் மீதே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஆனால், அதை விட அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயம் பயங்கரமானது என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
ரஷ்யா உக்ரைனை உடுருவிய விடயம், கடைசியில் அணு ஆயுத அச்சத்தில் வந்து முடிந்துள்ளது.
ஆம், புடின் உக்ரைனை ஊடுருவியதுபோல, ஐரோப்பா மீதும் போர் தொடுப்பாரானால், ஐரோப்பாவைக் காப்பாற்ற தனது அணு ஆயுதங்களைத் தருவதாக வாக்களித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்.
ஆக, உலக நாடுகள் பல தங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் துவங்கியுள்ள நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த பேச்சு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அது உலகத்தின் அழிவில்தான் சென்று முடியும் என்று கூறியுள்ளார்.
உலகில் ஏராளமானோர் பருவநிலை மாற்றம் குறித்த விடயங்கள் மீதே கனவம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், அதை விட அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயம் பயங்கரமானது என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
அணு ஆயுத தாக்குதல் நாளையே கூட நடக்கலாம் என்று கூறியுள்ள ட்ரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் பல ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் உடனடி ஆபத்து காத்திருக்கிறது என்றே கூறிவந்தார்.