நெதர்லாந்தில் மர்ம நபர் ஒருவரால் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாம் என்ற பகுதியில் நேற்று குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதிக்கு வருகைத்தந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயம் அடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் டாம் ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
தாக்குதல் தொடர்பில் தகவலரிந்த பொலஸார் கண்கானிப்பு வாகனங்களில் சந்தேகநபரை மடக்கி பிடித்துள்ளனர்.
இதன்படி ஹெலிகாப்டர் மூலம் அந்த நபர் கண்காணிக்கப்பட்டு மடக்கி பிடிக்கும் காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.