News

மியன்மார் நிலநடுக்கம்; 1000ஐ தாண்டிய உயிரிழப்புக்கள்

 

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை 10,000ஐத் தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.

இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

அங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது நகரில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அந்நாட்டு வைத்தியசாலையில் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (28) மாலை நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இன்று காலை வரை மியன்மாரில் 14 நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top