ரணில் மட்டுமல்லாமல் சஜித்திற்கும் ஆபத்தாகும் அநுர அரசின் முடிவு

படலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அது பல அரசியல் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் குறித்த விடயம் ஒரு தலைவலியாக மாறக்கூடும்.
படலந்த வதை முகாமில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்ட போது, நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை ரணசிங்க பிரேமதாச ஆவார்.
வதை முகாம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் சஜித் பிரேமதாச இது தொடர்பில் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
எனவே, படலந்த வதை முகாம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு, ரணில் மட்டுமல்லாமல் சஜித்திற்கும் ஆபத்தாகும் என அரசறிவியல் துறை பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.