ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரம்ஜான் விடுமுறை காலத்தில் சிரியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட, கோயாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, வெளிநாட்டினர் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்த சமயம், சிரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம். பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை, கடத்தல், பணயக்கைதிகள் பிடிப்பு, ஆயுத மோதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், 0969-333644, +963-969-333644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.