போர் நிறுத்த பேச்சு நின்ற நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால், உக்ரைனில் 23 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் பேச்சு நடத்தினார். அதில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, உக்ரைன் அதிபர் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, போரை நிறுத்தும் முயற்சியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ மற்றும் கடன் உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது.