வன்முறைகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக ஜனாதிபதி டினா போலுவார்டே தலைமையிலான அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து லிமாவின் வீதிகளில் பாதுகாப்புபடையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட வணிக நிறுவனங்களை குறிவைக்கும் குற்றவியல் கும்பல்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக் கும்பல்களைச் சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்திய மாதங்களில் கொலைகள், வன்முறைகள், அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பொது இடங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 16 ஆம் திகதி வரை 459 கொலைகள் நடந்துள்ளதாகவும், ஜனவரியில் மட்டும் 1,909 அச்சுறுத்தி பணம் பறித்தல் புகார்கள் வந்துள்ளதாகவும் லிமா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.