News

வீதி நிர்மாணத்துக்கு அமேசன் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்-வலுக்கும் எதிர்ப்புகள்.

 

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசன் காடுகளில் 1000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.

பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு வீதி நிர்மாணிக்க ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் வரவிருப்பதால், இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காடுகள் அழிப்பினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

அமேசன் மழைக் காடுகள் காபனீரொட்சைட் வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஒட்சிசனை வழங்கும் பல்லுயிர்த் தளமாக விளங்குகிறது.

வீதிகள் அமைக்கப்படுவதால், தங்களின் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top