”சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது’ என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. சீனா உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது. சீனா உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் சராசரியாக உலகளாவிய வளர்ச்சியில் 30 சதவீதம் பங்களிக்கிறது. உலக வர்த்தக அமைப்பை பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
சீனா-இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவு சிறப்பாக இருக்கிறது. அமெரிக்கா வரிகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்கொள்வதால், சிரமங்களை சமாளிக்க உலகளாவிய நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
சீனாவுக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும். வர்த்தக போரில் வெற்றியாளர்கள் கிடையாது. அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைப் பட்சமானது. இதனை கூட்டாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.